நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த
பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏற்றும் கலியோடு அகம் புறம்
என்றித்திறத்த எட்டுத்தொகை
இந்த பழம் பெரும் பாடல், எட்டுத்தொகை நூல்கள் யாவை என்று நாம் எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ள உதவுகிறது.
இப்பாடலுக்கு விளக்கம் பின் வருமாறு:
நற்றினை, குறுந்தொகை (இன் நூலிற்கு "நல்ல" என்ற அடை மொழி கொடுத்திருக்கிறார்கள்), ஐங்குறுநூறு, அதனை ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கிய புகழ்க்கொண்ட பரி பாடல், நன்கு கற்றவர்கள் உயர்வாய் பேசும் கலித்தொகை, இவற்றோடு அகநானூறு, புறநானூறு என்று மொத்தம் எட்டு நூல்களை நாம் எட்டுத்தொகை என்று கூறுவோம்.
1 comment:
Thank u. its very useful for students.Good explanation.I expect more from u.
Post a Comment