Friday, April 28, 2023

அருள்மிகு பிடாரி இரணியம்மன் கோயில்.

திருவானைக்கா எல்லை காவல் தெய்வம் இரணியம்மன். ஆனைக்கா கோயிலின் தென்கிழக்குப் பகுதியில், திருநீற்றான் மதிலுக்கு வெளியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சிறிய கோயில். எனினும் மிகவும் அழகான, அமைதியான கோயில். 

வாசலில் குபேர கணபதி.

அதைத் தாண்டியதும் உடைந்த மதில். அதற்கு அருகில் பாதை போட்டுள்ளனர்.


பலிபீடம் உள்ளது; அதற்கு அடுத்து நுழைவாயில். 


வலம் வரும்போது மணல் வெளியில் சப்பாணி கருப்பர், சங்கிலி ஆண்டவர், காத்தவராயர், தங்கையாள், மதுரைவீரன் ஆகியோர் உள்ளனர். அய்யனாரின் குதிரை வாகனம் உள்ளது. அதற்கு எதிரில், சற்றுத் தள்ளி ஐயனார் சந்நிதி (வலம் வரும்போது பார்ப்போம்).


தொடர்ந்து நடக்கையில் கோயிலுக்குரிய கிணறு உள்ளது. கிணற்றில் தண்ணீர் இருக்கிறது. கோயிலின் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இக்கிணற்றில் விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வருகையில், இரணியம்மன் கருவறையின் பின்புறம் வருகிறது. சற்று முன்னே செல்ல, கணபதி சந்நிதி. 



தொடர்ந்து மணல் வெளியில் நடக்க ஐயனார் சந்நிதி (முன்பே அறிமுகமானது). அதற்கு அடுத்து, தலமரமாக தற்போது இருக்கும் மருத மரம். ஆலமரமும் முன்பு இருந்தது; தற்போது இல்லை என்று அர்ச்சகர் தெரிவித்தார். மருதமரத்தின் அடியில் விநாயகர், நாகர், கிராம தேவதைகளின் சிலாரூபங்கள் (பழுதானவை) உள்ளன. இதற்கு அடுத்து பேச்சியம்மன் சந்நிதி உள்ளது.




இப்போது மூல தெய்வம் இரணியம்மன் சந்நிதி இருக்கும் மண்டபம் நோக்கிச் செல்கிறோம். நுழையும் போதே தேவியின் சிம்மம் நம்மை வரவேற்கிறது. உள்ளே செல்கிறோம்.

இரணியாசுரனை சம்ஹரிக்கும் கோலத்தில் அம்பாள் பெரிய வடிவோடு இருந்தாலும் பக்தர்களை இன்முகத்தோடு, முகத்தில் குறுநகை ததும்ப காட்சி அளிக்கிறாள்.

தரிசித்த பின், நமஸ்கரித்து விட்டு, மன நிறைவோடு திரும்புகிறோம்.


No comments: